1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 1 ஜூன் 2021 (10:29 IST)

கொரோனா தடுப்பூசி: ஜூலை-ஆகஸ்டில் ஒரு கோடி பேருக்கு போட இந்தியா இலக்கு

கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் வரும் ஜூலை - ஆகஸ்ட் மாத இடைப்பட்ட காலத்தில் போதுமான அளவுக்கு கொரோனா தடுப்பூசி கையிருப்பில் இருக்கும்  என்பதால் அப்போது ஒரு கோடி பேருக்கு போட முடியும் என்று இந்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
 
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கொரோனா தடுப்பூசி பணிக்குழு தலைவர் என்.கே. அரோரா, வரும் ஆகஸ்ட் மாதம் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட  கொரோனா தடுப்பூசி மருந்துகள் சுமார் 250 மில்லியன் டோஸ்கள் கையிருப்பில் இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக கூறினார்.
 
சீரம் இந்தியா நிறுவனம் அனுப்பியுள்ள கடிதத்தில் ஜூலை மாத இறுதியில் தங்களுடைய கொரோனா தடுப்பூசி உற்பத்தி திறன் அதிகரிக்கப்படும் என்றும் அப்போது  முதல் மாதந்தோறும் 10-12 கோடி தடுப்பூசி டோஸ் மருந்துகளை தயாரிக்க முடியும் என்று கூறியுள்ளது என்றும் அரோரா தெரிவித்தார்.
 
அந்த வகையில், மாதந்தோறும் 20-25 கோடி தடுப்பூசி டோஸ்கள் இந்தியாவில் இருக்கும் என்றும் ஒவ்வொரு மாதமும் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி போடுவதே நமது இலக்காக இருக்கும் என்றும் அரோரா கூறினார்.
 
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1.27 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் 2,796 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக இந்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.