செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (16:34 IST)

ரஷ்யாவுக்கு எதிரான போரில் கலந்து கொண்ட மிஸ் உக்ரைன் அழகி!

ரஷ்யாவுக்கு எதிரான போரில் கலந்து கொண்ட மிஸ் உக்ரைன் அழகி!
உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளிடையே கடுமையாக போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில் உக்ரைன் மக்கள் ரஷ்யாவை எதிர்த்து போரிட தயாராகி வருகின்றனர். 
 
இந்த நிலையிலும் உக்ரைன் நாட்டை சேர்ந்த டென்னிஸ் வீரர் செர்ஜி என்பவர் உக்ரைன் ராணுவ படையில் இணைந்து ரஷ்யா நாட்டிற்கு எதிராக போரிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தது.
 
இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி 2015ஆம் ஆண்டு மிஸ் உக்ரைன் பட்டம் வெற்ற அனஸ்டாசியா லென்னா அழகி தன் நாட்டுக்காக ரஷ்யாவை எதிர்த்து போரிட போராட்ட களத்தில் இணைந்துள்ளார். இது குறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது