இந்தியா-வங்கதேசம் இடையே ரூபாயில் வர்த்தகம் தொடக்கம்: வங்கதேச வங்கி கவர்னர் தகவல்..!
இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளுக்கு இடையே இதுவரை அமெரிக்க டாலரில் வர்த்தகம் நடந்து வந்த நிலையில் தற்போது ரூபாயில் வர்த்தகம் நடைபெற உள்ளது என வங்கதேச ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்துள்ளார்
இந்தியா வங்காளதேசம் இடையே அமெரிக்க டாலர் வர்த்தகத்தை குறைக்கும் அடிப்படையில் ரூபாய் வர்த்தகத்தை தொடங்கி உள்ளதாக வங்கதேச கவர்னர் அப்துல் ரவுப் தலுக்தர் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது
இரு நாடுகளுக்கு இடையே ஒரு பெரிய பயணத்தின் முதல் அடியாக ரூபாய் வர்த்தகம் தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வங்கதேசத்தின் டாகா, இந்தியாவின் ரூபாய் ஆகிய இருநாட்டு கரன்ஸிகளின் பரிமாற்றத்தின் அடிப்படையில் இனி வர்த்தகம் நடைபெறும்,
இந்த பரிவர்த்தனை நடவடிக்கையால் இந்தியாவுடனான வர்த்தக செலவினம் கணிசமாக குறையும் என்றும், இந்த புதிய பரிவர்த்தனை முறை வரும் செப்டம்பர் மாதம் முதல் முழு அளவில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
Edited by Siva