திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 27 ஜனவரி 2021 (21:55 IST)

ஏழைத் தொழிலாளிக்கு அடித்த ரூ.637 கோடி பரிசுத்தொகை !

ஒருவர் லாட்டரி சீட்டின் மூலம் ரூ.637 கோடியை பரிசாகப் பெற்றுள்ள சம்பவம் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது..

கனவுகளுக்குக் காரணமுண்டு என்று சிக்மண்ட் பிராய்ட் கூறியிருந்தார். இதுகுறித்து அவர் எழுந்திய கனவுகளும் விளக்கங்களும் என்ற புத்தகம் பிரபலமானது.

தற்போது இதை மெய்ப்பிக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

கனடா நாட்டில் வசித்து வருபவர் பிரவடவுடம். இவர் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். கடந்தாண்டு கொரொனா காலம் ஊரடங்கு அமலாக்கப்பட்டபோது, அவர் பணியாற்றிய நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் பிரவுடனுடமின் கணவரின் வாங்கி வந்த லாட்டரி சீட்டு எண்ணிற்கு இந்திய மதிப்பில் சுமாஅர் ரூ. 637 கோடி பரிசாகக் கிடைத்துள்ளது.

இதன்படி அவருக்கு கனடா நாட்டு பணத்தொகையாக 60 மில்லியன் டாலர் கிடைத்துள்ளது. இதுகுறித்த செய்தியை Ontario lottery and gaming நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் பிரவுடனுடம் பேங்கிற்குச் சென்று தனது பில்களைத் தேடிக்கொண்டிருந்தபோது, இந்த லாட்டரி எண் கிடைத்துள்ளதாக் கூறியிருக்கிறார். அவருக்குப் பலரும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.