பாதியாக குறையும் பரிசு தொகை: ஐபிஎல் 2020-க்கு ஆப்பு வைக்கும் பிசிசிஐ!!
ஐபிஎல் 2020 தொடரை வெள்ளும் சாம்பியன் அணிக்கு பரிசுத் தொகை பாதியாக குறைக்கப்படுகிறது என செய்தி வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 2020 ஆம் ஆண்டுக்கான தொடர் வரும் 29 ஆம் தேதி முதல் துவங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் முதல் போட்டி சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.
மும்பையில் முதல் போட்டி நடைபெற இருந்தாலும் ஒருசில நாட்கள் சென்னையில் பயிற்சியில் ஈடுபட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் சென்னை பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.
ஐபிஎல் 2020 கோப்பையை கைப்பற்றும் அணிக்கு ரூ.20 கோடி பரிசு தொகைக்கு பதில் ரூ.10 கோடி மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உறிதிபோட்டில் தோல்வி அடையும் அணிக்கு ரூ.6.25 கோடியும், ப்ளே ஆஃப் சுற்றில் வெளியேறும் அணிக்கு ரூ.4.30 கோடியும் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டிக்கான செலவினங்களை குறைக்கும் விதமாக ஐபிஎல் தொடருக்கான பரிசுத்தொகை குறைக்கப்படுவதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.