1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : புதன், 3 பிப்ரவரி 2016 (13:01 IST)

ரோபோக்களை மட்டுமே கொண்ட விவசாயப் பண்ணை: ஜப்பான் சாதனை

உலக நாடுகளில் முதல் முறையாக ரோபோக்களை மட்டுமே கொண்ட விவசாயப் பண்ணையை ஜப்பான் உருவாக்குகிறது.


 

 
விவசாயப் பண்ணையில் விதை விதைப்பது, செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றி வளர்ப்பதை, அவறை பராமரிப்பது, பின்னர் அறுவடை செய்வது என அனைத்து விதாமான வேலைகளையும் ரோபோக்களைக் மட்டுமே கொண்டு செய்யக் கூடிய விவசாய பண்ணையை ஜப்பான் நிறுவனம் உருவாக்க முடிவு செய்துள்ளது.
 
இந்த பண்ணை, அடுத்த ஆண்டு முதல் 4,400 சதுர அடியில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. ஜப்பானில், தொழிலாளர்களின் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில், அந்நாட்டில் ரோபோ தொழிலாளர்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
 
இந்நிலையில், சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்றில் 2035 ஆம் ஆண்டிற்குள் ஜப்பானில் செய்யப்படும் வேலைகளில் பாதி வேலைகளை ரோபோகளைக் கொண்டு செய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.
 
நமது நாட்டில், ஏராளமானவர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். போதய வருமாய் இல்லாமை, கடன் சுமை உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் ஆயிரக் கணக்கில் தற்கொலை செய்து கொண்டு உயிரிழ்ந்த வருகின்றனர்.
 
ஆனால், ஜப்பானில் விவசாய வேலைக்கு ஆள் பற்றாகுறை உள்ள நிலை நிலவுகிறது. அவர்கள் விவசாயத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொணடு இந்த ரோபோ பண்ணையை அமைக்க திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.