பில்கேட்ஸ் தம்பதிகள் விவாகரத்துக்கு இவர்தான் காரணமா? அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்ட செய்தி!
முன்னாள் உலகின் நம்பர் 1 பணக்காரரான பில்கேட்ஸ் அவர் மனைவியை விவாகரத்து செய்வது உலகளவில் பேசப்பட்டு வருகிறது.
உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான ஒருவரும் மைக்ரோசாப்ட் அதிபருமான பில்கேட்ஸ் தனது மனைவியை விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா ஆகிய இருவருக்கும் திருமணமாகி 27 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் தற்போது தனது மனைவியை அவர் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார். இருவரும் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விவாகரத்துக்கானக் காரணம் என்ன என்பது குறித்து அமெரிக்க ஊடகமான தி வால்ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் பில்கேட்ஸ் பாலியல் வழக்கில் சிக்கி சிறை தண்டனை பெற்ற தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டெய்னுடன் தொடர்பில் இருந்ததாகவும், அவர் வீட்டுக்கு அடிக்கடி சென்று தங்கியதாகவும், அதனால் அதிருப்தியுற்றதாலேயே மெலிண்டா கேட்ஸ் விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.