திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 11 மே 2021 (11:18 IST)

பிக்பாஸ் பிரபலத்துக்கு கொரோனா தொற்று!

பிக்பாஸ் பிரபலமும் பாடகருமான ஆஜித்துக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பட்டம் வென்று பிரபலமானவர் பாடகர் ஆஜித். அதன் பின்னர் பல திரைப்படங்களில் இவர் பாடல்கள் பாடிவந்த நிலையில் கடந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார். இந்நிலையில் இப்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது சம்மந்தமாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.