புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 12 செப்டம்பர் 2022 (07:41 IST)

ராணி எலிசபெத் எழுதிய ரகசிய கடிதம்; 2085ல் தான் பிரிக்கணுமாம்! – அப்படி என்ன இருக்கும்?

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைந்த நிலையில் அவர் எழுதிய ரகசிய கடிதம் குறித்த தகவல்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து மகாராணியாக 70 ஆண்டு காலம் ஆட்சி செய்த இரண்டாம் எலிசபெத் தனது 96வது வயதில் தற்போது உயிரிழந்துள்ளார். எலிசபெத் ராணியின் மறைவையடுத்து இங்கிலாந்தில் 10 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில் எலிசபெத் ராணி சம்பந்தப்பட்ட தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. அப்படியாக தற்போது அவர் எழுதிய ரகசிய கடிதம் குறித்த செய்தியும் வைரலாகியுள்ளது.


இங்கிலாந்தின் காலனியாதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளில் ஒன்று ஆஸ்திரேலியா. பின்னர் விடுதலை நாடான ஆஸ்திரேலியாவின் சிட்னி மாநகர மேயரை குறிப்பிட்டு இரண்டாம் எலிசபெத் கடந்த 1986ல் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

பக்கிங்காம் மாளிகையின் சீல் வைக்கப்பட்ட அந்த கடிதத்தை 2085ம் ஆண்டு ஒரு நல்ல நாளில் திறந்து அதில் உள்ள செய்தியை சிட்னி நகர மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அந்த கடிதம் சிட்னி நகரில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை பாதுகாக்கும் கட்டிடம் ஒன்றில் பாதுகாப்பு அறையில் கண்ணாடி பெட்டிக்குள் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளதாம். இன்னும் 63 ஆண்டுகளுக்கு அந்த கடிதத்தில் என்ன எழுதியுள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியாது.