வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 20 ஏப்ரல் 2019 (14:54 IST)

காதல் ஜோடிக்கு மரண தண்டனை? அப்படி என்ன செய்தார்கள்?

தாய்லாந்தில் கடலுக்குள் வீடுகட்டிய காதல் ஜோடிக்கு மரன தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
 
அமெரிக்காவை சேர்ந்த ஒரு கோடீஸ்வர இளைஞர் தாய்லாந்தில் வசித்து வரும் ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண்ணும் ஒரு பணக்கார குடும்பத்தை சேர்ந்தவராவார்.
 
இந்நிலையில் அந்த காதல் ஜோடி, தாய்லாந்தில் புகெட் தீவில் இருந்து 12 கடல்மையில் தூரத்தில்  கடலுக்கடியில் கான்கிரீட் வீடு ஒன்றை கட்டியுள்ளனர். இந்த வீட்டை தாய்லாந்து கடற்படையினர் கண்டுபிடித்து புகெட் போலீஸில் புகார் அளித்தனர்.
 
அனுமதி பெறாமலும், தாய்லாந்து இறையான்மையை மீறியதாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்கள் மீதான் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.