வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 16 டிசம்பர் 2019 (10:33 IST)

குடியுரிமை சட்டத் திருத்தம்; பிரிட்டனில் வலுக்கும் எதிர்ப்பு

இந்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரிட்டனில் இந்திய தூதரகம் முன்பு ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் வலுபெற்று வருகின்றன. மேலும் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து பிரிட்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு பல பிரிவுகளை சேர்ந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக பிரிட்டனில் வாழும் அஸ்ஸாம் சமூகத்தினர், பாரம்பரிய உடை அணிந்து தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.