ஜில்லாக இருங்கள் கிரேட்டா!! அமெரிக்க அதிபர் டிவிட்

Arun Prasath| Last Modified வெள்ளி, 13 டிசம்பர் 2019 (12:45 IST)
கிரேட்டா தனது கோபத்தை கட்டுபடுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஸ்வீடனை சேர்ந்த 16 வயது பெண்ணான கிரேட்டா தான்பெர்க், பருவநிலை மாற்றத்திற்கு எதிராக போராடி வருகிறார். சமீபத்தில் ஐ.நா.வில் நடைபெற்ற பருவநிலை மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்களை கடுமையாக சாடினார்.

இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு கிரேட்டாவை டைம் பத்திரிக்கை சிறந்த நபராக தேர்வு செய்துள்ளது. இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது டிவிட்டர் பக்கத்தில், “கிரேட்டா தனது கோபத்தை கட்டுபடுத்த கற்றுக்கொள்ள வேண்டும். அவரது நண்பர்களுடன் நல்ல பழமையான திரைப்படங்களை அவர் கண்டு களிக்க வேண்டும், ஜில் கிரேட்டா, ஜில்! “ என பதிவிட்டுள்ளார்.

டிரம்பின் இந்த டிவிட்டிற்கு பதிலளிக்கும் விதமாக, கிரேட்டா தனது டிவிட்டர் பயோ பக்கத்தில், “ கோபத்தை கட்டுபடுத்த கற்றுக்கொள்ளும் சிறுமி, ஜில்லாக இருக்கிறேன்,. நண்பர்களுடன் நல்ல பழமையான திரைப்படங்களை பார்த்துக்கொண்டிருக்கிறேன்” என மாற்றியுள்ளார்.
இதில் மேலும் படிக்கவும் :