6 மணி நேரம் தூங்கினால் ரூ.42 ஆயிரம் பரிசு: தாராளம் காட்டும் அலுவலகம்

sleep
Last Modified புதன், 24 அக்டோபர் 2018 (12:22 IST)
ஜப்பானை சேர்ந்த நிறுவனம் தங்களது ஊழியர்கள் வாரம் 5 நாட்கள் இரவில் குறைந்தது 6 மணி நேரம் தூங்கினால் ரூ.42 ஆயிரம் ஊக்கப்பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
 
ஜப்பானைச் சேர்ந்த கிரேசி என்ற மேட்ரிமோனி நிறுவனம் தங்களது ஊழியர்கள்  வாரம் 5 நாட்கள் இரவில் குறைந்தது 6 மணி நேரம் தூங்கினால் ரூ.42 ஆயிரம் ஊக்கப்பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள நிறுவனம் பலர் செல்போன் மோகத்தால் இரவு சரியாக தூங்குவதில்லை.
 
தூக்கமின்மையால் அலுவலகத்திற்கு வரும் ஊழியர்கள் சரியாக வேலை செய்வதில்லை. எனவே தான் ஊழியர்களை தூங்கவைக்க இந்த நடைமுறையை துவக்கியுள்ளோம். பிரத்யேக ஆப் மூலம் ஊழியர்களின் தூக்கம் கணக்கிடப்பட்டு அவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :