புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 15 அக்டோபர் 2018 (14:55 IST)

வங்கியின் கூரையிலிருந்து விழுந்த மலைப்பாம்பு: தெறித்து ஓடிய வங்கி ஊழியர்கள்

வங்கியில் புகுந்த மலைப்பாம்பை கண்ட வங்கி ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு தப்பியோடினர்.
 
சீனாவின் நேனிங் மாகாணத்தில் உள்ள சின் செங் வங்கிக் கிளையில் வங்கி ஊழியர்களுக்கிடையே மீட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது வங்கியில் கூரையிலிருந்து  1.5 மீ. நீளமுள்ள மலைப்பாம்பு தவறி விழுந்தது.
 
இதனைக்கண்ட வங்கி ஊழியர்கள் மரண பயத்தில் ஆளுக்கொரு பக்கம் தெறித்து ஓடினர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீட்புத் துறையினர், பாம்பை பிடித்து வன விலங்குகள் நல மையத்திடம் ஒப்படைத்தனர். இந்த காட்சியானது சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.