ஒரே ஏவுகணை.. அமெரிக்கா க்ளோஸ்! – பகீர் கிளப்பும் வடகொரிய ஏவுகணை!
வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய ஏவுகணை ஒன்று உலகிற்கு பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.
கொரிய தொழிலாளர் கட்சி நிறுவப்பட்ட 75வது ஆண்டு விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் வட கொரியாவின் அதிநவீன ஆயுதங்கள் மற்றும் ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. அதில் இடம்பெற்ற ஹவாசாங் – 16 என்ற ஏவுகணை உலக நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
உண்மையில் ஐசிபிஎம் வகை ஏவுகணைகளில் உலகிலேயே மிகப்பெரிய ஏவுகணையாக இது கருதப்படுகிறது. இதனால் கொரியாவில் இருந்த நிலையிலேயே உலகின் எந்த நாட்டின் மீதும் இந்த ஏவுகணையை எளிதில் ஏவ முடியும் என்பதோடு மட்டுமல்லாமல், ஏவுகணை தடுப்பு தொழில்நுட்பங்களும் இதன் மீது செல்லுபடியாகாது என பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா – வட கொரியா இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில் இந்த ஏவுகணை அமெரிக்காவுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.