பெண்கள் அழகாக இருந்தால் பாலியல் பலாத்தாரங்கள் நடக்கத் தான் செய்யும் - ஜனாதிபதியின் மட்டமான பேச்சு
நிறைய பெண்கள் அழகாக இருந்தால் நிறைய பாலியல் பலாத்கார சம்பவங்களும் நடைபெறத் தான் செய்யும் என பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ள கருத்து கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
சர்ச்சைக் கருத்துக்களை கூறுவதில் பெயர்போன பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோவிடம் அவரது சொந்த ஊரான டேவோவில் அதிக பலாத்கார சம்பவங்கள் நடைபெறுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அவர் அழகான பெண்கள் அதிகமுள்ள இடங்களில் பலாத்காரங்களும் அதிகம் இருக்கத்தான் செய்யும் என கூறினார். இவரது கருத்து கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சர்வதேச மகளிர் அமைப்பினர் ஜனாதிபதியின் கருத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.