1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
  4. President meets karunanidhi in hospital

கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்த ஜனாதிபதி

கருணாநிதி
காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். 
திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஒரு வாரமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருடைய உடல்நலத்தை  இந்தியாவில் உள்ள முக்கிய தலைவர்கள் அனைவரும் நேரிலும், தொலைபேசியிலும் கேட்டறிந்து அவர் விரைவில் நலம் பெற வாழ்த்தினர்.
 
நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், அதித், சூர்யா, விஜய் ஆண்டனி, கவுண்டமணி, செந்தில் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர். 
 
இந்நிலையில் ஜனாதிபதி, கலைஞரின் உடல்நிலை குறித்து நேரில் நலம் விசாரிக்க உள்ளார் என கூறப்பட்ட நிலையில் இன்று சென்னை வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அமைச்சர்கள் வரவேற்றனர்.
 
பின் காவேரி மருத்துவமனைக்கு சென்ற அவரை ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட திமுகவினர் வரவேற்றனர். கருணாநிதிக்கு அளித்து வரும் சிகிச்சைகள் பற்றி ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் ஜனாதிபதி கேட்டறிந்தார். விரைவில் கருணாநிதி குணமடைய வாழ்த்துவதாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
அடுத்த கட்டுரையில்
வங்கி கணக்கில் குறைந்தபட்ச தொகை; வாடிக்கையாளர்களுக்கு அபராதம்