காலையில் தெலுங்கானா, மதியம் தமிழகம் இரவில் கேரளா: ஜனாதிபதியின் பிசி சண்டே
இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று ஞாயிற்று கிழமையாக இருந்தாலும் அரசு பயணமாக காலையில் தெலுங்கானா, மதியத்தில் தமிழ்நாடு மற்றும் இரவில் கேரளா என பிசியாக இருந்தார். இதனை அவர் தனது டுவிட்டர் பக்கத்திலும் பதிவு செய்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமையாக இருந்தபோதில் நேற்று தெலுங்கானா மாநிலத்திற்கு அரசுமுறை சுற்றுப்பயணம் செய்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அதன் பின்னர் தமிழகத்தின் சென்னை நகருக்கு வருகை தந்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார். அதன்பின்னர் அவர் கேரளா சென்று முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் காலை உணவு தெலுங்கானாவிலும், மதிய உணவு தமிழகத்திலும் இரவு உணவு கேரளாவிலும் சாப்பிட்டதாக குறிப்பிட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமையிலும் பிசியாக இருந்த ஜனாதிபதிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.