திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 3 ஏப்ரல் 2023 (15:32 IST)

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

earthquake
பப்புவா  நியூ கினியா  நாட்டில் 7.2 அளவிலான சக்திவாய்ந்த   நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில், துருக்கி மற்றும் சீனா ஆகியா நாடுகளில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதில், அந்த நாடுகளிலுள்ள கட்டிடங்கள் இடிந்து பெரும் விபத்து ஏற்பட்டு, பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் உலக நாடுகளையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், சீனா, தைவான், இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலும் நில நடுக்கம் அவ்வப்போது உணரப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,'பப்புவா நியூ கினியா என்ற நாட்டில் 7.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இங்குள்ள கடலோர நகரமான வெவாக்கிலிருந்து சுமார் 97 கிமீ தூரத்தில் 62 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில நடுக்கம் அதிகாலை 4 மணிக்கு ஏற்பட்டுள்ளதாகவும், இதில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை' என்று  அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.