ரஷ்யாவில் உள்ள அமெரிக்கர்கள் வெளியேறுங்கள்! – வெள்ளை மாளிகை உத்தரவால் பதற்றம்!
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போரை அமெரிக்க கண்டித்து வரும் நிலையில் தற்போது ரஷ்யாவில் உள்ள அமெரிக்கர்கள் அனைவரும் வெளியேறும்படி அமெரிக்க அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக ரஷ்யா அண்டை நாடான உக்ரைன் மீது தொடர்ந்து போர் நடத்தி வருகிறது. இதில் இருதரப்பிலும் ஏராளமான வீரர்கள் இறந்துள்ள நிலையில், பல லட்சம் மக்கள் அகதிகளாக மாறியுள்ளனர். இந்நிலையில் உக்ரைனுக்கு ஆயுத, பொருளாதார உதவிகளை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து அளித்து வருவதை ரஷ்யா எச்சரித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் செய்தி சேகரிப்பதற்காக ரஷ்யா சென்ற அமெரிக்க பத்திரிக்கையாளர் ஒருவரை ரஷ்யா கைது செய்திருப்பது சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் இந்த செயலைத் தொடர்ந்து அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்க அரசு, ரஷ்யாவில் அலுவல்ரீதியாகவோ, சுற்றுலா பயணமாகவோ தங்கியுள்ள அமெரிக்க மக்கள் உடனடியாக நாடு திரும்ப உத்தரவிட்டுள்ளது.
ரஷ்யாவின் இந்த கைது நடவடிக்கைக்கு அமெரிக்கா என்ன எதிர்வினை ஆற்றப் போகிறது என்ற பதற்றம் எழுந்துள்ளது.
Edit by Prasanth.K