வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: புதன், 6 மே 2020 (15:29 IST)

வருமானத்தைவிட உயிர்தான் முக்கியம் – முதல்வருக்கு இயக்குநர் சேரன் கோரிக்கை!

தமிழத்திலும் சென்னை தவிர பிற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதோடு அரசு மாதுபானங்களின் விலையை ரூ.20 உயர்த்தியுள்ளது. சாதாரண 180 மிலி மதுபானங்கள் அடக்க விலையோடு ரூ.10 அதிகமாகவும், நடுத்தர மற்றும் ப்ரீமியம் பானங்கள் ரூ.20 அதிகமாகவும் விற்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து தற்போது டாஸ்மாகில் மது வாங்க வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து, பிரபல இயக்குநர் சேரன் தனது டுவிட்டர் பக்கத்தில், ஒரு பதிவிட்டு அதை முதல்வருக்கு டேக் செய்துள்ளார்.

அதில், நிரந்தர மதுவிலக்கு அறிவிப்பீர்கள் என எதிர்பார்த்தேன் அய்யா.. இதைவிட மதுவிலக்கு அமுல்படுத்த வேறு வாய்ப்பு கிடைக்காது. மீண்டும் உங்கள் ஆட்சி உருவாக்க இது ஒரு பெரும் ஆயுதமாக மாறியிருக்கும். அரசிற்கான வருமானம் என்பதைவிட பெரும்பாலான மக்களின் உயிர்காப்பதல்லவா முக்கியம்.  என தெரிவித்துள்ளார்.