வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: செவ்வாய், 10 மார்ச் 2020 (13:21 IST)

கொரோனா பீதியால் தனியாக பிரேயர் நடத்திய போப் ஆண்டவர்..

கொரோனா பீதியால் சிற்றாலயத்தில் தனியாக பிரார்த்தனை நடத்தினார் போப் ஆண்டவர்.

ஐரோப்பாவில் கொரோனா வைரஸால் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 7,375 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரோமின் வாடிகன் நகரில் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அருங்காட்சியகங்கள் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் தேவாலயத்தில் பிரார்த்தனை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில் வழக்கமாக நூற்றுக்கணக்கான மக்களுடன் இணைந்து தேவாலயத்தில் பிரார்த்தனை நடத்தும் போப் பிரான்சிஸ், கொரோனா பீதியால் நேற்று காலை தனது சிற்றாலயத்தில் தனியாக பிரார்த்தனை நடத்தினார்.