செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 4 பிப்ரவரி 2021 (10:00 IST)

ஒரு டிவீட் உங்கள் ஒற்றுமையைக் குலைக்கும் என்றால்… ரிஹானாவுக்கு ஆதரவாக தாப்ஸி டிவிட்!

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக டிவீட் செய்த பாப் பாடகிக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிரபலங்கள் டிவீட் செய்து வருகின்றனர்.

டெல்லியில் விவசாயிகள் 80 நாள்களுக்கும் மேலான தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கான இணையதளத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த போராட்டம் பற்றி இதுவரை வாய் திறக்காத இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பாப் பாடகி ரிஹானா விவசாயிகளுக்கு ஆதரவாக டிவீட் செய்ததும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் வெளிநாட்டவர்கள் தலையிடவேண்டாம் என பொங்கி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை டாப்ஸி ரிஹானாவுக்கு ஆதரவாக ‘ஒரு டிவீட் உங்கள் ஒற்றுமையைக் குலைக்கும் என்றால். ஒரு ஜோக் உங்கள் குலைக்கிறது அல்லது உங்கள் மத உணர்வுகளைப் புண்படுத்துகிறது என்றால், நீங்கள்தான் உங்கள் அமைப்பை வலுப்படுத்தும் வேலையை செய்யவேண்டும். அதைவிடுத்து மற்றவர்களுக்கு பிரச்சார போதகராக மாறக் கூடாது’ எனக் கூறியுள்ளார். இந்த டிவீட் விவசாயிகள் போராட்டத்துக்கு எதிராக பேசிய எல்லா பிரபலங்களையும் சாடுவது போல அமைந்துள்ளது. அதனால் டாப்ஸிக்கு வாழ்த்துகளும் ஆதரவுகளும் குவிந்து வருகின்றன.