வெள்ளி, 26 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (11:57 IST)

சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர்! – ஓபிஎஸ் உள்பட பலர் கைது!

சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர்! – ஓபிஎஸ் உள்பட பலர் கைது!
ஜெயலலிதா பல்கலைகழக இணைப்பு மசோதாவிற்கு எதிராக சாலையில் தர்ணா செய்த ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதா பல்கலைகழகத்தை அண்ணாமலை பல்கலைகழகத்துடன் இணைக்க மசோதா தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக இது தொடர்பான விவாதத்தில் திமுக ஜெயலலிதா பல்கலைகழகத்தை உள்நோக்கத்துடன் அண்ணாமலை பல்கலைகழகத்துடன் இணைப்பதாக கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது. மேலும் ஜெயலலிதா பல்கலைகழக இணைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர் மெரீனா சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்களை போலீசார் கைது செய்துள்ளனர்.