சாகசம் செய்ய போய் 330 அடி உயரத்திலிருந்து விழுந்த நபர் – என்ன ஆனார் தெரியுமா?
போலந்து நாட்டில் பங்கி ஜம்ப் எனப்படும் சாகச விளையாட்டை விளையாட 330 அடி உயரத்திலிருந்து குதித்தவர் கயிறு அறுந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலந்து நாட்டில் பங்கி ஜம்ப் என்ற சாகச விளையாட்டு மிகவும் பிரசித்தி பெற்றது. பல அடி உயரங்களுக்கு மேலே இருந்து காலில் கயிறை கட்டிக்கொண்டு குதித்து விடுவார்கள். கீழே வர வர கயிறின் நீளம் குறைந்து தரைக்கு அருகே வந்ததும் அந்த கயிற்றின் துணையோடு தொங்க தொடங்கி விடுவார்கள்.
இந்த சாகச விளையாட்டை விளையாட ஆசைப்பட்டிருக்கிறார் 39 வயது நபர் ஒருவர். கயிறை கட்டியபடி 330 அடி உயர் கிரேனிலிருந்து குதித்த அவர் இடையில் கயிறு அறுந்ததால் அப்படியே கீழே வந்து விழுந்தார். பாதுகாப்புக்காக கீழே வைக்கப்பட்டிருந்த காற்றடைக்கப்பட்ட பலூனில் விழுந்ததால் உயிர் பிழைத்தார். ஆனாலும் 330 அடி உயரத்திலிருந்து விழுந்ததால் முதுகெலும்பில் பலத்த அடிகளும் சில காயங்களும் ஏற்பட்டிருக்கின்றன.
அவர் 330 அடி உயரத்திலிருந்து விழும் அந்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.