நகரும் படி விபத்தில் மூதாட்டிக்கு கால் துண்டானது !

china
Last Modified செவ்வாய், 23 ஜூலை 2019 (19:40 IST)
சீனாவில் உள்ள ஹர்பின் மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை அன்று சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒரு மூதாட்டி மால் ஒன்றுக்கு சென்றுள்ளார்.
அங்கு தானியங்கிப் படிகள் இருந்த காரணத்தால் அவர் அதில் ஏறிப் பயணித்துள்ளார். அப்போது நகரும் படிக்கட்டுகள் உடைந்ததாகத் தெரிகிறது.
 
இதைப் பார்த்த அருகில் இருந்தவர் அவசர பட்டனை அழுத்த மூதாட்டியின் கால் மேலும் அப்படியில் சிக்கிக்கொண்டது. பின்னர் அரை மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு மூதாட்டியை மீட்டனர். இந்த எதிர்பாராத விபத்தில் மூதாட்டியின் இடது  கால் முழங்காலுக்குக் கீழே உடைந்து துண்டானது.
 
அதன்பின்னர் அங்கிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்ட மூதாட்டுக்கு, சிகிச்சை அளிகப்பட்டு வருகிறது. அதாவது மாலில்  பராமரிப்பு பணிக்கான வேலைகள் நடப்பதாக அறிவிப்பு பலகை வைத்திருந்தும் கூட அதை மூதாட்டி பார்காமல் இருந்ததே விபத்துக்கான காரணம் என்று மால் தரப்பினர் கூறியுள்ளனர். மூதாட்டியின் உறவினர்களும் மால் நிர்வாகத்தினர் மீது குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
 


இதில் மேலும் படிக்கவும் :