செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 22 செப்டம்பர் 2021 (19:31 IST)

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.50,000 நிவாரணம்?

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 50 ஆயிரம் நிவாரணம் அளிக்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ரிந்துரை செய்திருப்பதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது 
 
கொரோனாவால் உயிர் இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என சமீபத்தில் வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின்போது மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன் இதற்கு பதிலளித்துள்ள மத்திய அரசு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 50 ஆயிரம் நிவாரணம் வழங்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி 50 ஆயிரம் நிவாரணம் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்