வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 19 மே 2022 (10:31 IST)

வைரஸை பரப்பிய மொபைல் ஆப்ஸ்.. ப்ளேஸ்டோரில் அதிரடி நீக்கம்!

Joker Malware
வைரஸை வைத்து பயனாளர்கள் தகவல்களை திருடிய மொபைல் செயலிகளை ப்ளேஸ்டோர் நீக்கியுள்ளது.

உலகம் முழுவதும் மக்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தி வரும் நிலையில், பெரும்பாலும் ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களிலேயே செயலாற்றி வருகின்றன. ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கான செயலிகள் கூகிள் ப்ளேஸ்டோரில் அதிகாரப்பூர்வமாக கிடைக்கின்றன.

அதேசமயம் சில செயலிகள் பயனாளர்களின் தகவல்களை திருடுவது போன்ற செயல்களிலும் ஈடுபடுகிறது. இவ்வாறான செயலிகளை கூகிள் நிறுவனம் ஆய்வு செய்து நீக்கி வருகிறது.

தற்போது Style Message, Blood Pressure App, Camera PDF Scanner உள்ளிட்ட 3 செயலிகளை கூகிள் ப்ளேஸ்டோர் நீக்கியுள்ளது. ஜோக்கர் என்ற மால்வேரை பயன்படுத்தி பயனாளர்களின் பணம் மற்றும் தகவல்களை திருடுவதாக எழுந்த புகாரின் பேரில் கூகிள் ப்ளேஸ்டோர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.