திங்கள், 8 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth K
Last Modified: திங்கள், 14 ஜூலை 2025 (09:07 IST)

புறப்பட்ட சில வினாடிகளில் வெடித்துச் சிதறிய விமானம்! பயணிகள் நிலை என்ன? - அதிர்ச்சி வீடியோ!

London Flight Crash

லண்டன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து வெடித்துச் சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

லண்டன் சௌத்தெண்ட் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பீச்க்ராஃப்ட் சூப்பர் கிங் ஏர் லைட் என்ற சிறிய ரக விமானம் பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது. டேக் ஆஃப் செய்யப்பட்ட சில விநாடிகளிலேயே திடீரென செயலிழந்த விமானம் வேகமாக தரையில் வந்து மோதியதில் வெடித்து தீப்பற்றி எரிந்தது. இந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் கதி என்ன என்ற அச்சம் சூழ்ந்துள்ளது.

 

விமானம் விபத்திற்குள்ளான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இந்த விமான விபத்தில் மேலெழும்பிய புகை பல கிலோமீட்டர் தூரத்திற்கு தென்பட்டதாக அப்பகுதியில் உள்ளவர்கள் கூறுகின்றனர்.

 

கடந்த மாதம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் இதேபோல புறப்பட்ட சில நிமிடங்களில் செயலிழந்து விழுந்து வெடித்த சம்பவத்தில் ஒரு பயணி தவிர அனைவருமே உயிரிழந்தனர். இந்நிலையில் அப்படியான ஒரு சம்பவம் லண்டனிலும் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K