அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து.. நடுவானில் இரு விமானங்கள் மோதியதால் பரபரப்பு..!
அமெரிக்காவில் சமீப காலமாக விமான விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், இன்று காலை அமெரிக்க நேரப்படி 8:28 மணிக்கு ஹரிசோன் மாகாணத்தில் உள்ள ஒரு பகுதியில் 172 எஸ் என்ற விமானம் புறப்பட்டு சென்றது.
அதே சமயம், மற்றொரு விமானமும் நடுவானில் பறந்து கொண்டிருந்த நிலையில், இரண்டு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதின. இரு விமானங்களும் ஒற்றை எஞ்சின் கொள்ளவை என்றும், இவை மோதிக்கொண்டதில் தீப்பிடித்து கீழே விழுந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தில், இரண்டு விமானங்களில் இருந்த தலா ஒருவர் என மொத்தம் இருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும், விரைவில் விபத்துக்கான காரணம் தெரியவரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட விமான விபத்தில் 67 பேர் உயிரிழந்த நிலையில், அமெரிக்காவில் தொடர்ந்து விமான விபத்துகள் நிகழ்ந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva