#MeToo: டிரம்ப் டூ வைரமுத்து - டிரெண்டாகும் ஹேஸ்டேக் பின்னணி என்ன?
கவிஞர் வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கள் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தாலும் ஒரு சில ஊடகங்கள் இந்த விஷயத்தை கண்டுகொள்ளவே இல்லை. பாலியல் குற்றச்சாட்டுகள் தற்போது #MeToo என்கிற ஹேஷ்டேக் மூலம் பகிரப்படுகிறது.
இந்த ஹேஷ்டேக் உருவாவதற்கு முன்பு இது ஒரு இயக்கமாக இருந்தது. ஆஃப்ரோ - அமெரிக்க இனத்தை சேர்ந்த ஒருவர் இந்த இயக்கத்தை 2006 ஆம் ஆண்டு துவங்கினார். பெண்களுக்கு எதிரான குற்றங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர இந்த இயக்கம் உருவாக்கப்பட்டது.
ஆனால், இது கடந்த 2017 ஆம் ஆண்டு ஹேஸ்டேக்காக உருவெடுத்து பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்று சுற்றிய இந்த ஹேஷ்டேக் தற்போது தமிழகத்தை ஆட்டம் காண வைத்துள்ளது.
இந்த ஹேஷ்டேக்கில், ஹார்வி வெய்ன்ஸ்டேய்ன், பல ஹாலிவுட் பிரபலங்கள், டிரம்ப், நானா படேகர் இப்போது வைரமுத்து என பலரின் பெயர் இதில் அடிப்பட்டுள்ளது. ஆஸ்கர் விழா, கோல்டன் குளோப் விழாவில் கூட இந்த ஹேஸ்டேக் பற்றி பேசப்பட்டது.