1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 27 பிப்ரவரி 2020 (14:39 IST)

கேலி செய்த ரசிகர் - வாயை அடைத்த ஓவியர்

ஓவியா

நடிகை ஓவியாவின் புதிய தோற்றத்தை கேலி செய்த ரசிகருக்கு சரியான பதில் கொடுத்து வாயடைக்க வைத்துள்ளார் ஓவியா.

பிக்பாஸில் கிடைத்த அளவற்ற புகழுக்குப் பின்னர் கூட ஓவியாவுக்கு சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் விளம்பரங்களில் நடித்தும் அவ்வப்போது சமூகவலைதளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்தும் தன் இருப்பைக் காட்டிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் புதிய ஹேர்ஸ்டைலுடன் கூடிய புகைப்படத்தை வெளியிட்டார்.

அதைபார்த்த ஒரு குறும்புக்கார ரசிகர் ’இந்த முடியோடு இருந்தால் உங்களை துணிக்கடை திறக்க கூட கூப்பிடமாட்டார்கள்’ என சொல்ல, உடனே அந்த ரசிகருக்கு ‘என் அழகை பற்றி நீங்க கவலைப்படாதீங்க. நான் விக் கூட வச்சுக்குவேன். மூளையைத்தான் வளர்க்க விரும்புறேன், தலைமுடியை கிடையாது. என் சுதந்திரத்தில் தலையிட நீங்கள் யார். ’ என வாயடைத்துள்ளார்.