ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 10 மார்ச் 2020 (16:03 IST)

கொரோனா கோ… கோ கொரோனா – கோஷம் போட்டு விரட்டும் இந்தியர்கள் !

கொரோனா வைரஸ் தாக்குதலை கோஷம் போட்டு போக சொல்லும் சில நபர்களின் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் உலக நாடுகள் அது
குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. நெட்டிசன்களும் சமூக வலைதளங்களில் இதுகுறித்த விழிப்புணர்வு மீம்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸைப் போ என சொல்லி சிலர் சீனாக்காரர்களையும் சேர்த்து கோஷம் போடும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. இவர்களின் முடநம்பிக்கையைப் பலரும் கேலி செய்து தங்கள் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.