புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (11:34 IST)

தாண்டவமாடிய சூறாவளி: 3 படகுகள் கவிழ்ந்து 31 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டில் நடுகடலில் திடீரென ஏற்பட்ட சூறாவளியில் சிக்கி 3 படகுகள் கவிந்த சம்பவம் அப்பகுதியில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் விசாயஸ் பகுதியை சேர்ந்த மூன்று கப்பல்கள் கடலில் பயணித்துக் கொண்டிருந்தன. லோயிலோ –குய்மார்ஸ் ஜலசந்தியில் படகுகள் பயணித்து கொண்டிருந்தபோது திடீரென சூறாவளி ஏற்பட்டது. இதனால் சேதமடைந்த படகுகள் கடலில் மூழ்கின. படகில் பயணித்தோரும் கடலில் மூழ்கினர்.

தற்போது கடலிலிருந்து உடல்களை மீட்கும்பணிகள் தொடர்ந்து வருகின்றன. நேற்றுவரை 31 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.

திடீரென நடைபெற்ற சூறாவளியின் தாக்குதல் பிலிப்பைன்ஸ் மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.