வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 3 ஆகஸ்ட் 2019 (13:49 IST)

”டன்” கணக்காக உருகும் பனி பாறைகள்: உலக அழிவின் முன்னோட்டமா?

கிரீன்லாந்து நாட்டில் பல ஆயிரம் கிலோக்களாக பனிப் பாறைகள் வெப்பமயமாதல் காரணமாக உருகி வருவதால் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சம் நிலவிவருகிறது.

சமீப காலமாக கிரின்லாந்தில் உள்ள பனிப்பாறைகள் வெப்பத்தால் உருகி வருகின்றன. இதனால் கடல் நீர் மட்டமும் அதிகரித்து வருகிறது. கிரீன்லாந்தில் இந்த ஆண்டு மட்டும் வெப்ப நிலை 20 டிகிரி செல்ஷியஸாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் பல கோடி கிலோ அளவிலான பனிப்பாறைகள் உருகியுள்ளன. கிரீன்லாந்து பகுதி பனிப்பாறைகளாலேயே பெரும்பாலும் சூழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

இது குறித்து சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள், கிரீன்லாந்தில் வெப்பம் அதிகரிக்கும்போது இது போன்று பனிப்பாறைகள் உருகுவது சகஜம் தான் என்றாலும், இந்த ஆண்டு அதிக அளவிலான பனிப்பாறைகள் உருகியுள்ளது அசாதாரணமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்ககூடிய ஆபத்தும் உள்ளது என கூறுகின்றனர்.

புவி வெப்பமயமாதலால் கிரீன்லாந்து மிகப் பெரிய பாதிப்பை சந்தித்து வருவதாகவும், இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.