புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 10 ஏப்ரல் 2021 (11:41 IST)

கடைசி வரை மன்னர் ஆகாமல் மரணித்த ஃபிலிப்... காரணம் எலிசெபெத்?

ஃபிலிப் கடைசி வரை மன்னர் என அழைக்கப்படாமல் எடின்பரோ கோமகன், இளவரசர் என மட்டுமே அழைப்பட்டார். இதற்கான காரணத்தை தற்போது தெரிந்துக்கொள்ளுங்கள்... 
 
பிரிட்டிஷ் அரசி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான ஃபிலிப், தனது 99ஆவது வயதில் காலமானார். இந்த தகவலை பக்கிங்காம் அரண்மனை  அறிவித்துள்ளது. 1947 ஆம் ஆண்டில் இளவரசி எலிசபெத் அரசியாவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக அவரை இளவரசர் திருமணம் செய்து கொண்டார். பிரிட்டிஷ் அரச குடும்ப வரலாற்றில் நீண்ட காலம் சேவையாற்றியவர் அவர்.
 
அவரது மறைவு தொடர்பாக பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,தனது நேசத்துக்குரிய கணவர், எடின்பரோ கோமகன் இளவரசர் ஃபிலிப் இறந்து விட்டார் என்ற தகவலை மாட்சிமை பொருந்திய அரசி ஆழ்ந்த வருத்தத்துடன் வெளியிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், ஃபிலிப் கடைசி வரை மன்னர் என அழைக்கப்படாமல் எடின்பரோ கோமகன், இளவரசர் என மட்டுமே அழைப்பட்டார். இதற்கான காரணத்தை தற்போது தெரிந்துக்கொள்ளுங்கள்... இங்கிலாந்த்  சட்டத்தின்படி, இங்கிலாந்து அரச குடும்பத்தின் அடுத்த மன்னர் அல்லது ராணியாக யார் வரவேண்டும் என்பதை ரத்த உறவுதான் தீர்மானிக்குமே தவிர பாலினம் இல்லை. 
 
அதேபோல அரச குடும்ப ரத்த உறவு உள்ள ஒரு பெண், அரச குடும்பம் அல்லாத அல்லது அரச குடும்பத்தை துறந்த ஒருவரை திருமணம் செய்துக்கொண்டால் அசரது கணவர் இளவரசர் என்றோ மன்னர் என்றோ அழைக்கப்பட மாட்டார். ஃபிலிப் கிரேக்க மற்றும் டேனிஷ் அரச குடும்பத்தினருக்கு இளவரசனாக பிறந்திருந்தாலும் எலிசபெத்தை திருமணம் செய்வதற்காக அரச குடும்பத்தை துறந்ததால் அவர் இளவரசர், மன்னர் என அழைக்கப்படவில்லை. 
 
இருப்பினும் எலிசபெத் தனது அதிகாரத்தை பயன்படுத்தி 1957 ஆம் ஆண்டு தனது கணவருக்கு இளவரசர் என்ற பட்டத்தை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.