1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (19:36 IST)

பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.234: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Petrol
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் தற்போது மீண்டும் மிக அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
இன்று மட்டும் பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 6 ரூபாய் அதிகரித்து 234 என விற்பனையாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
அதேபோல் டீசல் விலை 244 என்றும் மண்ணெண்ணெய் விலை 200 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது 
 
இந்தியாவில் கடந்த மூன்று மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை உயராத நிலையில் இந்தியாவை விட இரு மடங்குக்கும் அதிகமாக பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
பாகிஸ்தானின் பிரதமராக ஷரீப் பதவி ஏற்றதில் இருந்து பெட்ரோல், டீசல் உள்பட எரிபொருளின் விலை மற்றும் மின்சார கட்டணம் அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது