திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 20 ஏப்ரல் 2022 (12:57 IST)

பணம் கொடுத்தால்தான் செல்போனுக்கு சார்ஜ்: உக்ரைனில் அவலநிலை!

charge
பணம் கொடுத்தால் தான் செல்போனுக்கு சார்ஜ் செய்யப்படும் என்ற அவல நிலையை உக்ரைனில் இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த சில நாட்களாக உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது என்பதும் உக்ரைனில் உள்ள கட்டடங்கள் தரைமட்டமாகி விட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் உள்ள உக்ரைனில் ரஷ்ய தாக்குதல் காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் பதுங்கி உள்ளனர். இந்த நிலையில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கு கூட கஷ்டப்படுவதாகவும் குறிப்பாக செல்போனுக்கு சார்ஜ் போட கூட முடியாத நிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது 
 
ஆங்காங்கே இருக்கும் கடைகளில் மற்றும் நிறுவனங்களில் சார்ஜ் போடுவதற்கு பொதுமக்கள் காசு கொடுத்ததாகவும் வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது