நடுவானில் திடீரென வெடித்த செல்போன்: விமான பயணி அதிர்ச்சி
நடுவானில் திடீரென வெடித்த செல்போன்: விமான பயணி அதிர்ச்சி
விமானத்தில் பயணி ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தபோது நடுவானில் திடீரென அவரது செல்போன் வெடித்ததால் அவர் பெரும் அதிர்ச்சி அடைந்தார்
அசாம் மாநிலத்தில் உள்ள திமருகர் பகுதியில் இருந்து டெல்லிக்கு இண்டிகோ விமானம் ஒன்றில் பயணி ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தார். இந்த நிலையில் அவரது பையில் இருந்த செல்போன் வெடித்தது
இதன் காரணமாக அந்த பகுதி புகைமூட்டம் காணப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த விமான ஊழியர்கள் உடனடியாக தீயை அணைக்கும் கருவியை கொண்டு புகையை அணைத்தனர். இது குறித்த விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது