புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 18 ஏப்ரல் 2022 (13:07 IST)

லடாக் எல்லை அருகே செல்போன் டவர்! அடங்காத சீனா! – எல்லையில் பரபரப்பு!

Tower
லடாக் எல்லை அருகே சீன எல்லையில் சீன ராணுவம் செல்போன் டவர்களை அமைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லடாக் எல்லையில் சீன ராணுவத்திற்கும், இந்திய ராணுவத்திற்கும் இடையே கடந்த ஆண்டு நடந்த மோதலில் இரு தரப்பு வீரர்களும் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து சீனா – இந்தியா இடையே எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில் இந்திய – சீன எல்லை பகுதிகள் அருகே சீன ராணுவம் குடியிருப்புகளை ஏற்படுத்தி வருவது செயற்கைக்கோள் படங்களில் கண்டறியப்பட்டது. இந்நிலையில் தற்போது சீனா லடாக் எல்லை அருகே செல்போன் கோபுரங்களை அமைத்துள்ளது. இதனால் எல்லை பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது.