வெள்ளை இன மக்கள் மீது செலுத்தும் கவனம் கருப்பின மக்கள் மீதும் வருகிறதா?
உக்ரைன் மீதான அதிக கவனம் கருப்பின மக்களுக்கு எதிரான பாகுபாடு என உலக சுகாதார நிறுவன தலைவர் வேதனை.
வெள்ளை இன மக்களின் மனிதாபிமான அடிப்படையிலான அவரச உதவிகளுக்கு அளிக்கும் முக்கியத்துவம், இந்த உலகம் கருப்பின மக்களின் தேவைகளுக்கு அளிப்பதில்லை என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரியேசஸ் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு அளிக்கப்படும் மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளில், மிகச் சிறிய அளவே பிற நாடுகளுக்கு அளிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார் . உக்ரைனுக்கு உதவுவது மிகவும் முக்கியமாக கருதப்படுவதாகவும், ஏனெனில், அது உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் கூறியுள்ளார்.
ஆனால், எத்தியோப்பியாவில் உள்ள திக்ரே மாகாணம், ஏமன், ஆப்கானிஸ்தான் அல்லது சிரியாவில் நடக்கும் மனிதாபிமான நெருக்கடி அதே கவனத்தைப் பெறுவதில்லை என்றார். இந்த உலகம் உண்மையில் வெள்ளை இன மக்கள் மீது செலுத்தும் கவனம் போல கருப்பின மக்கள் மீதும் கவனம் செலுத்துகிறதா என்று எனக்கு தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.