1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 18 நவம்பர் 2021 (15:18 IST)

அமெரிக்காவில் விமான விபத்து; தந்தை, மகளை காப்பாற்ற உதவிய ஐபேட்!

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் நடந்த விமான விபத்தில் ஐபேட் சிக்னல் மூலம் தந்தை, மகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள விஸ்கஸ் பார் ஸ்க்ராண்டன் விமான நிலையத்திலிருந்து ஒற்றை என்ஜின் கொண்ட விமானம் ஒன்றில் தந்தை மற்றும் 13 வயது மகள் ஆகியோர் பயணித்துள்ளனர்.

விமானம் புறப்பட்டு சிறிது நேரத்திலேயே ரேடாரில் இருந்து மாயமானது. இதையடுத்து விமானம் காணமல் போன காட்டுப்பகுதியில் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்ட மீட்பு படையினர் தேடி வந்த நிலையில் முதலில் விமானத்தை பைலட்டை கண்டுபிடித்து காப்பாற்றியுள்ளனர். தந்தை, மகளை தேடும் பணி தொடர்ந்த நிலையில் சிறுமி வைத்திருந்த ஐபேடின் சிக்னலை வைத்து அவர்களை மீட்பு படையினர் மீட்டுள்ளனர். பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் சிறிய காயங்களுடன் தப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.