1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 27 ஜனவரி 2023 (15:21 IST)

ஒரு டாலர் ரூ.255.. பாகிஸ்தானில் வரலாறு காணாத கரன்ஸி வீழ்ச்சி!

Pakistan
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 81 ரூபாயை விட அதிகரித்துள்ள நிலையில் பாகிஸ்தானின் ரூபாய் மதிப்பு மிகவும் சரிந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக பொருளாதார சீரழிவு ஏற்பட்டு வருகிறது என்றும் அந்நாடு திவால் ஆகும் நிலை வெகு தூரத்தில் இல்லை என்றும் உலக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்து வந்தனர் 
 
இந்த நிலையில் தற்போது வந்திருக்கும் தகவலின் படி அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு பாகிஸ்தானின் ரூபாய் படி 255 என்ற அளவில் வீழ்ச்சி அடைந்ததால் பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
ஏற்கனவே பாகிஸ்தான் கடும் பொருளாதார சிக்கலில் இருப்பதால் அரசு கட்டிடங்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் ரூபாய் மதிப்பீடு வீழ்ச்சி அடைந்துள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran