ஞாயிறு, 22 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 25 ஜனவரி 2023 (14:29 IST)

400 கோடி ரூபாய் செலவில் ஆளவந்தான்… ரி ரிலீஸ் அப்டேட் கொடுத்த கலைப்புலி எஸ் தாணு!

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி தோல்வி அடைந்த படம் ஆளவந்தான்.

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் கமல்ஹாசன், ரவீனா டண்டன், மனிஷா கொய்ராலா நடித்த 'ஆளவந்தான்' திரைப்படம் கடந்த 2001ஆம் ஆண்டு வெளியாகியது. இந்த படத்தின் பட்ஜெட் அந்த காலத்திலேயே ரூ.20 கோடி. இது இன்றைய மதிப்பில் ரூ.400 கோடி என்பது குறிப்பிடத்தக்க்கது.

இந்த படம் வசூல் ரீதியாக படுதோல்வி அடைந்தது. இதனால் கமலுக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்தது. பல இடங்களில் தாணு கமல்ஹாசனை கடுமையாக விமர்சனம் செய்தார். ஆனால் ஒரு கட்டத்துக்குப் பிறகு இந்த படத்துக்கான பார்வையாளர்கள் உருவாகினர்.

இந்நிலையில் இப்போது 'ஆளவந்தான்' படத்தை டிஜிட்டலாக்கி மீண்டும் திரையரங்குகளில் மீண்டும் ரிலீஸ் செய்ய உள்ளதாக கலைப்புலி எஸ் தாணு அறிவித்துள்ளார்.

இந்நிலையில் ரி ரிலீஸ் குறித்த போஸ்டரை வெளியிட்டுள்ள தயாரிப்பாளர் தாணு விரைவில் படம் 1000 திரையரங்குகளில் உலகமெங்கும் ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளார்.