காஷ்மீர் எல்லையில் 10000 ராணுவ வீரர்கள் – எல்லையில் பதற்றம்
காஷ்மீர் எல்லையில் திடீரென 10 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிக்கப்படும் நடவடிக்கையால் ஜம்மு-காஷ்மீர் பகுதியில் பதட்ட நிலை உருவாகியுள்ளது.
காஷ்மீரின் சமவெளிப் பகுதியில் 10 ஆயிரம் ராணுவ வீரர்களை குவிக்க மத்திய பாதுகாப்பு அமைச்சரவை நேற்று முடிவு எடுத்துள்ளது. பாகிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக உளவுத்துறை அளித்த தகவலின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த உத்தரவின் பேரில் சி.ஆர்.பி.எஃப், சி.ஏ.பி.எஃப். எஸ்.எஸ்.பி, பி.எஸ்.எஃப் பிரிவுகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து காஷ்மீருக்கு ரயில்கள் மூலம் வீரர்கள் வரவழைக்கப்படுவார்கள் என தெரிகிறது. இந்த திடீர் ராணுவ குவிப்பால் காஷ்மீரில் பதட்டநிலை அதிகரித்துள்ளது.