செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 27 ஜூலை 2019 (20:28 IST)

இந்தியாவுக்கு வந்த அபாச்சே ஹெலிகாப்டர்கள் – அமெரிக்காவில் தயாரானவை!

இந்திய ராணுவத்திற்காக அதிநவீன போர்கருவிகளை கொண்ட தாக்குதல் ஹெலிகாப்டரான அபாச்சே ஏ64 அமெரிக்காவிலிருந்து இந்தியா கொண்டுவரப்பட்டது.

இந்திய ராணுவத்தை பலப்படுத்த இந்திய அரசு பல்வேறு மேம்பாட்டு திட்டங்களை செய்து வருகிறது. ரஷ்யாவிடமிருந்து ஆயுத கப்பல், பிரான்ஸிடமிருந்து ரஃபேல் விமானம் என பல நாடுகளிலுருந்தும் ராணுவ தளவாடங்களை வாங்கி வருகிறது இந்தியா. அந்த வகையில் அமெரிக்காவின் போயிங் நிறுவனத்துடன் அதிநவீன ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்காக 2015ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி போயிங் நிறுவனத்திடம் அபாச்சே ஏ64 ரக விமானங்கள் 22 வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.

அமெரிக்காவில் போயிங் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு முதல் தவணையாக 4 ஹெலிகாப்டர்கள் இந்தியாவிற்கு வந்து சேர்ந்துள்ளன. அடுத்த வாரத்தில் இன்னும் 4 ஹெலிகாப்டர்கள் வந்து சேரும். மீதமுள்ள ஹெலிகாப்டர்கள் 2020ம் ஆண்டில் தவணை முறையில் டெலிவரி செய்யப்படும்.

உலகின் அதிவேக ராணுவ ஹெலிகாப்டர்களில் ஒன்றான அபாச்சே மணிக்கு 290 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க கூடியது. வானிலிருந்து பூமிக்கு ஏவப்படும் ஏவுகணைகள், சரமாரியாக குண்டுமழை பொழியும் 30எம்.எம் மெஷின் கன், டாங்கிகளை சுட்டு வீழ்த்தக்கூடிய ஹெல்ஃபயர் ராக்கெட்டுகள் ஆகியவை இதன் சிறப்பம்சங்கள். அபாச்சே ரக ஹெலிகாப்டர்களில் மூன்று வகை உள்ளது. அதில் முதல்வகைதான் இந்த ஏ64. இதன் தயாரிப்பு விலை 20 மில்லியன் டாலர்கள்.