திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 13 ஆகஸ்ட் 2023 (15:24 IST)

பாகிஸ்தானில் இடைக்கால பிரதமர் நியமனம்.. அதிபர் ஒப்புதல்..!

பாகிஸ்தானில் கடந்த புதன்கிழமை நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் புதிய பிரதமரை நியமனம் செய்ய அந்நாட்டு அதிபர் ஒப்புதல் அளித்த நிலையில் தற்போது அன்வார்-உல் ஹக் கக்கர் என்பவர் இடைக்கால பிரதமராக பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
 பாகிஸ்தான் இடைக்கால பிரதமராக பிஏபி கட்சியை சேர்ந்த அன்வார்-உல் ஹக் கக்கர் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த புதன்கிழமை பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. 
 
புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் வரை இடைக்கால பிரதமர் ஆன  பிரதமராக அன்வார்-உல் ஹக் கக்கர்  என்பவர் தேர்வாகியுள்ளார்.  இந்த ஆண்டு இறுதியில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் வரை இவர் இடைக்கால பிரதமராக இருப்பார் என்று கூறப்படுகிறது. 
 
இடைக்கால பிரதமர் நியமனத்திற்கு பாகிஸ்தான் அதிபரும் ஒப்புதல் அளித்த நிலையில் இன்று அல்லது நாளை அன்வார்-உல் ஹக் கக்கர் இடைக்கால பிரதமர் பொறுப்பை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva