திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (08:20 IST)

இந்தியாவை 22 ஆக உடைப்போம்: பாகிஸ்தான் அமைச்சரின் திமிர்ப்பேச்சு

காஷ்மீர் பிரச்னையில் உலக நாடுகள் கவனம் செலுத்தாவிட்டால் அணு ஆயுதப் போரை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானே, பாகிஸ்தான் முதலில் அணு ஆயுதத்தை பயன்படுத்தாது என்று பின்வாங்கிய நிலையில் பாகிஸ்தானுடன் மோதினால் அணு ஆயுதங்கள் மூலம் இந்தியாவை 22 துண்டுகளாக உடைப்போம் என  பாகிஸ்தான் அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது பேட்டி ஒன்றில் திமிராக கூறியுள்ளார்.
 
நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது 'பாகிஸ்தானுடன் மோதினால் இந்தியா 22 கூறுகளாக உடையும் என்றும் பாகிஸ்தானிடம் 150 கிராம் முதல் 250 கிராம் எடை கொண்ட அணுகுண்டுகள் தயாராக இருப்பதாகவும், இந்தியாவின் எந்த பகுதியையும் அதை கொண்டு தாக்கமுடியும் என்றும் கூறியுள்ளார். 
 
பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது ஏற்கனவே இந்தியா குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி பரபரப்ப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருபுறம் பிரதமர் இம்ரான்கான்  அணு ஆயுதத்தை பயன்படுத்தமாட்டோம் எனக் கூறிய அதே நாளில் பாகிஸ்தான் அமைச்சர் ரஷித் அகமது  இந்தியாவை 22 ஆக உடைப்போம் எனக் கூறியிருப்பது பாகிஸ்தானின் இரட்டை நிலையை காட்டுவதாக தெரிகிறது