செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (09:53 IST)

50 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை; குறைய தொடங்கிய பாதிப்புகள்! – இந்திய நிலவரம்!

இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கைகள் 50 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில் பாதிப்புகள் 2 சதவீதத்திற்கும் கீழாக குறைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் முதலாக இந்தியாவை உலுக்கி வரும் கொரோனா வைரஸால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது, தற்போது பாதிப்புகள் மெல்ல குறைந்து வரும் நிலையில், தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 57,981 பேருக்கு புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இதனால் மொத்த பாதிப்பு 26,47,664 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 924 பேர் உயிரிழ்ழந்த நிலையில் மொத்தம் உயிரிழப்பு 50,921 ஆக உயர்ந்துள்ளது. 19,19,843 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.