செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 28 ஆகஸ்ட் 2019 (16:53 IST)

ராகுல்காந்தியின் அரசியல் நிலைப்பாடு குழப்பமானது - பாகிஸ்தான் மந்திரி குற்றச்சாட்டு

சமீபத்தில் மத்திய அரசு, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை நிராகரித்தது. இதற்கு எதிர்கட்சிகள் பலத்த எதிர்ப்புகள் தெரிவித்தனர். இந்நிலையில் பாகிஸ்தான் அரசும் உலக நாடுகள், மற்றும் ஐநாவில் முறையிட்டுப் பார்த்தும் இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என கூறிவிட்டது. இதனால் பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இந்நிலையில் காஷ்மீர் விவகாரத்தில் அரசியல் குழப்பமானது என்றும்,அவரது தாத்தா நேருஜி போன்று இருக்க வேண்டும் எனவும் பாகிஸ்தான் கருத்து தெரிவித்துள்ளார். 
ஏற்கனெவே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்  திறமையற்றவர் என அந்த நாட்டின் எதிர்கட்சியினர் விமர்சித்துள்ளனர்.அதேசமயம் காஷ்மீரீல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளை காப்பாற்றுவதில் கவனம் செலுத்தும்படியும் கேட்டுக்கொண்டுள்ளது.
 
இந்த நிலையில் காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தான் மனித உரிமைகள்  அமைச்சர் ஷிரின் மசாரி ஐநா சபைக்கு , ராகுல் காந்தியின் வார்த்தைகளை குறிப்பிட்டு கடிதம் எழுதியுள்ளார்.
 
இதற்கிடையே ராகுல் காந்தி தன் டுவிட்டர் பக்கத்தில் : காஷ்மீர் என்பது இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனை இதில் பாகிஸ்தானுக்கோ அல்லது மற்ற நாடுகளுக்கு இந்த விவகாரத்தில் தலையிட உரிமையில்லை என்றும், காஷ்மீரில் வன்முறை நடக்கிறது. உலகில் நடக்கும் பயங்கரவாதத்தின் மிக்கிய ஆதரவாளராக பாகிஸ்தானால் தூண்டப்பட்டு ஆதரிக்கப்படுகிறது என தெரிவித்திருந்தார்.
 
இதற்கு பாகிஸ்தான் அறிவியல் தொழில்நுட்ப மந்திரி பவாத் உசேன் சவுத்ரி தனது டுவிட்டர் ராகுல் காந்தி, நடைமுறைக்கு ஒத்துவரும் நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். உங்கள் அரசியலில் பெரிய பிரச்சனை உள்ளது என ராகுல் மீது குற்றம் சாட்டினார். மேலும் ராகுல் காந்தி தனது தாத்தா நேருவைபோல தெளிவாக இருக்க வேண்டும் எனவும் இந்தியாவின் மதச்சார்பின்மை மற்றும் தளராதவாத சிந்தனையின் அடையாளமாக இருந்தது எனவும் தெரிவித்திருந்தார்.
பாகிஸ்தான் அமைச்சர், ராகுல் மீது கூறிய குற்றச்சாட்டுக்கு கங்கிரஸ் தலைவர்கள் பதிலடி கொடுப்பர்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.